நேற்று நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஒரே ஒரு நாள் இவர் நிதியமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
அவர் பதவி விலகுவதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
அலி சப்ரி முன்னதாக நீதி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு அமைச்சரவையும் பதவி விலகிய போது அவரும் பதவி விலகியிருந்தார்.
அதன்பின்னர் நேற்று அவர் நிதியமைச்சராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவி ஏற்றிருந்தார்.
Discussion about this post