ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 30 வார காலப் பகுதியில் 30 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால்நிலையின் அடிப்படையில் பெண்கள் படுகொலைச் செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மாகாணத்தில் ஐந்து பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் இதுவரையில் மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைகளில் பல கொலைகள் பெண்களுக்கு நெருக்கமான ஆண்களினால் மேற்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது. பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் குறிப்பாக வீட்டு வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த மாகாண அரசாங்கங்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post