கனடா ஒன்ராறியோவில் முற்போக்கு கென்சவேர்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஒன்ராறியோ நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 63 ஆசனங்களே தேவைப்படும் நிலையில் பழமைவாதக் கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, புதிய ஜனநாயகக் கட்சி 31 ஆனங்களையும், லிபரல் கட்சி 8 ஆசனங்களையும், பசுமைக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
நடைபெற்ற தேர்தலில் பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் 6 ஆயிரத்து 210 வாக்கு வித்தியாசத்தில், லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மானுல் அப்துல்லகியைத் தோற்கடித்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
மார்க்கம் துர்ன்கில் தொகுதியில் போட்டியிட்ட் லோகன் கணபதில், லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சான்ரோ ராமை 2 ஆயிரத்து 496 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
Discussion about this post