இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூபா 159 ரூபா 61 சதம் இலாபம் ஈட்டப்படுகின்றது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோலில் லீற்றருக்கு 33.62 ரூபாவும், ஓட்டோ டீசலில் லீற்றருக்கு 1.55 ரூபாவும், லங்கா சுப்பர் டீசலில் லீற்றருக்கு 41.89 ரூபாவும் இலாபமாகப் பெறுகிறது.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விற்பனையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 30.62 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய விலை திருத்தம் மற்றும் வரிகளுக்குப் பிறகு இந்த லாபம் கிடைத்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
Discussion about this post