நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கயந்த கருணாதிலக்க, ஹெக்டர் அப்புஹாமி, சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே, ரோஹினி கவிரத்ன, காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட தரப்பினர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மே தின கூட்டத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் முறையற்ற செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளனர்.
மே தின பேரணியின்போது, சில நபர்களின் செயற்பாடுகள் தொடர்பாக திரிபுபடுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Discussion about this post