நாட்டின் தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் குறைந்த அளவிலேயே எரிபொருளை வெளியிடுகின்றது என்றும், வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றது என்றும் அவர் கூறினார்.
தற்போது நாடு முழுவதும் வரிசைகள் காணப்படுகின்றமைக்கு இதுவும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய சூழ்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post