கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் விடப்பட்ட உழவியந்திரம் ஒன்று திருடப்பட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை பரந்தன் நகரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் பெறுவதற்காக கிளிநொச்சி, இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உழவியத்திரத்தை வரிசையில் நிறுத்தியுள்ளார்.
அன்று இரவு உரிமையாளர் சென்று பார்த்தபோது உழவியத்தைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post