எதிர்வரும் மூன்று நாள்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
போதுமானளவு எரிபொருள் உள்ளது என்றும், அவற்றை விநியோகிக்கும் வரை வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவீற்றர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
டீசல் ஏற்றிய கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்தது என்றும், இந்திய கடன் வசதியின் கீழ் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் எரிபொருள் ஏற்றிய மேலும் 3 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெசாக் பூரணை தினம் காரணமாக நேற்று நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post