எரிபொருளைப் பதுக்கிய குற்றச்சாட்டில் 137 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்தச் சுற்றிவளைப்புகளில் 27 ஆயிரம் லீற்றர் பெற்றோல் மற்றும் 22 ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பெற்றோல் நிலையங்களில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் விற்கப்படும் எரிபொருளை சேகரித்து பல்வேறு நபர்கள் அதிக விலைக்கு விற்கின்றனர் என்று கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
எரிபொருளை மோசடி செய்து அதிக விலைக்கு விற்பது தொடர்பாக பொதுமக்களுக்குத் தகவல் தெரிந்தால் 118 – 119 மற்றும் 1997 ஆகிய எண்களுக்கு அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post