எரிபொருள் பிரச்சினைக்கு எதிர்வரும் 10 நாள்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதியை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது நாட்டில் தற்போது பெரும் பிரச்சினையாக மாறியிருக்கும் எரிபொருள், எரிவாயு உட்பட சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் 10 நாள்களில் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post