மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 5 மணிநேரம் வரிசையில் நின்ற ஒருவர் உயிரழிந்துள்ளார்.
ஹற்றனைச் சேர்ந்த 55 வயதான தேவநாயகம் கிருஷ்ணசாமி என்னும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்ற அவர், இரவு 11 மணிவரையில் வரிசையில் நின்றுள்ளார்.
வீட்டுக்கு வந்த அவர், அதிக சோர்வாக இருக்கிறது என்று கூறியதுடன், வாந்தியும் எடுத்துள்ளார். அதன்பின்னர் உறக்கத்துக்குச் சென்ற அவர், உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post