எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த உழவியந்திரம் திருடப்பட்டிருந்த நிலையில், நேற்று உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் உழவியந்திரம் மீட்கப்பட்டது.
கடந்த 7ஆம் திகதி பரந்தனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த உழவியந்திரம் திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தருமபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசித் தகவலின் அடிப்படையில், விசுவமடு, புன்னைநீராவிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள வீதியோரம் உதிரிபாகங்கள் திருடப்பட்ட நிலையில், உழவியந்திரம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post