எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து பெற்றோல் மற்றும் டீசலைப் பெறும் நிலையில், கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப எரிபொருள் நிரப்பப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஒரு லீற்றர் எரிபொருளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 100 முதல் 150 மில்லிலீற்றர் எரிபொருள் குறைவாகவே கிடைக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் எரிபொருள் பம்பியின் திரையில் அது காண்பிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.
மக்கள் நீண்ட வரிசைகயில் நிற்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதைப் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுகுின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. தற்போது போத்தல்களில் எரிபொருள் நிரப்பப்படுதில்லை என்பதால் நிரப்பப்படும் எரிபொருளின் அளவைச் சரியாகக் கணிக்க முடியாதுள்ளது என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.
அதேவேளை, இந்தப் பிரச்சினை கொரோனா தொற்றுக் காலத்திலும் காணப்பட்டது என்றும், இது தொடர்பில் பரிசோதிப்பதற்கு எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளரின் கீழ் நிர்வாக பதவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Discussion about this post