22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இரட்டை பிரஜாவுரிமை பெற்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கவுள்ளனர்.
அவர்களை கௌரவமான முறையில் பதவி விலக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அரசில் உயர்மட்டப் பதவிகளை வகித்து வரும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களும் பதவிகளில் இருந்து விலக்கும் தீர்மானத்தை எடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post