இந்திய உயர்ஸ்தானிகர் (high commissioner) சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் (srilanka) சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஜனாதிபதிவடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப்போதும் தமிழ் சமூகத்தில் உள்ள இளவயதினருடன் தனது கட்சி நெருங்கிச் செயற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.குறிப்பாக, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அக்கறையாக இருப்பதாகவும் மேலும் அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்
Discussion about this post