ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகநபர்களிடம் இருந்து 550 மில்லிகிராம், 80 மில்லிகிராம், 50 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post