இலங்கையில் ஊரடங்குக் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் இன்று பல இடங்களில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகைக் குண்டுப் பிரயோகம் மேற்கொண்டனர்.
கொழும்பில் எதிர்க்கட்சிகளால் இன்று பெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தபோதும் அவற்றை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
போராதனை பல்கலைக் கழகத்துக்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால் அதையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதேநேரம் நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதையும் காண முடிந்தது.
Discussion about this post