யாழ்ப்பாணத்தில் பூசகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றிக் கொண்டமையே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீடொன்றுக்குச் சென்றிருந்த பூசகர் திடீரென உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டைச் சேர்ந்த 34 வயதுடையவரே உயிரழிந்தவராவார்.
அவரது உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊசி மூலம் ஹெரோய்ன் போதைப் பொருளை ஏற்றிக்கொண்டமையே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Discussion about this post