உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றில் உடன் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தற்போதுள்ள 8 ஆயிரத்து 719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் குறைப்பால் உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடப்படமாட்டாது. உறுப்பினர்களைக் குறைத்து அதன்மூலம் மீதமாகும் நிதியை நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post