உரும்பிராய் தெற்கில் சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கோண்டாவில் பகுதியில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியைக் காணவில்லை என்று நேற்றுமுன்தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்துது. நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், கோண்டாவில் இ.போ.ச. டிப்போவுக்கு அருகில் தனியாக நின்றிருந்த நிலையில் சிறுமியை மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் செல்வபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருடன் சிறுமி காதல் வயப்பட்டுச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post