டிசெம்பர் மாதம் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என்று தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் சுற்று உடன்படிக்கைகள் இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிததுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுக் கையிருப்பு அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நிதிக்கான குறுகிய கால நிதி மூலோபாய நடவடிக்கைகளைத் தயாரிப்பதே எதிர்வரும் அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை டிசெம்பர் மாதம் வரையில் காத்திருக்க வேண்டும் என்றும் அடுத்த சில வாரங்களில் இந்தியா மற்றும் சீனாவுடன் நிதி உதவிகளுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
Discussion about this post