உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சிறிலங்கா 5 ஆவது இடத்தில் உள்ளது என்று உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லெபனான், சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை சிறிலங்கா பிடித்துள்ளது.
சிறிலங்காவில் உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்தி 40 வீதம் முதல் 50 வீதம் வரை குறைந்துள்ளது என்றும், உணவுப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூனில் 75.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலையில் 82.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை உயர்வானது உலகளாவிய நெருக்கடியைத் தூண்டியுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது மில்லியன் கணக்கான மக்களைக் கடுமையான வறுமைக்குத் தள்ளுவதோடு ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் பெரிதாக்கும் என்று உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
Discussion about this post