உணவுப் பொருள்களின் விலையேற்றம் அதிகமாக உள்ள நாடுகளில் சிறிலங்கா ஐந்தாவது இடத்தில் இருப்பது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்திற்கு தீர்வு காண வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதைத் தவிர்க்க முடியாதது என்றாலும், அதற்கு தீர்வு காண முடியும். சிறிலங்கா அரிசி மேலதிகமாகக் கொண்ட நாடு. உணவில் தன்னிறைவு பெற்ற நாடு.
இரசாயன உர பாவனையை தடை செய்வதற்கான தீர்மானம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இதற்கு வழிவகுத்தது. இது உணவு நெருக்கடிக்கு முக்கியமாக வழிவகுத்தது.
ஜனாதிபதியும் நானும் உணவு நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தினோம். நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் சவாலை விவசாயிகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற போது 2 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் காணியில் மாத்திரமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அதை 2 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கவுள்ளோம். எரிபொருள் மற்றும் உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் நிலப்பரப்பை 5 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஹெக்ரெயராக அதிகரிக்க முடியும். அவ்வாறு செயற்பட்டால் நாட்டில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டைத் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post