பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது கடந்த (07.10.2023) ஆம் திகதி தாக்குதலை நடாத்தினார்கள்.
இத்தாக்குதலின் போது இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 இற்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து சென்றுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து காஸாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் படிபடியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. காஸா நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
தற்போது தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் காஸா நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலைத் தெரிவித்து வரும் நிலையில் ஐ.நா உணவு அமைப்பு காஸாவில் தற்போது 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு மக்கள் உணவு எரிபொருள் இன்றி தவிப்பதாகவும் அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
Discussion about this post