இந்தியப் (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் 23 ஆம் திகதி உக்ரைன் (Ukraine) செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குறித்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த விஜயத்தில் மோடி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ அறிக்கைமேலும் இரு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமருக்கும் ரஷ்ய (Russia) ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றவுள்ளது.30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
Discussion about this post