ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணி வெளியிடப்பட்டுள்ளது . கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணிகளை, உற்பத்தி நிறுவனம் மீளப்பெற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு தமிழ் பேசும் மக்களிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஷ் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் .
Discussion about this post