எனது வாழ்க்கையை தாண்டி ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் அது ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள்,கர்ணன்,மாமன்னன், மற்றும் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை ஆகிய படங்களின் இயக்குனரே மாரி செல்வராஜ் ஆவார்.
ஈழத்து மக்களின் வாழ்க்கை முறை
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்து நாவல்களை படிக்கும்போது அது உணர்வு பூர்வமானதாக இருக்கும். அந்த மக்களுடைய வாழ்க்கை முறை வேறானது.நாம் நினைத்து கூட பாரக்க முடியாத இன்னொரு வாழ்க்கைமுறை அது.
ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும்
எனவே ஈழத்து ஒரு நாவலை அல்லது ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் என்பது எனது விருப்பமாகும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post