இந்தியாவின் ஒப்பரேஷன் அஜய் திட்டத்தின் மீட்பு நடவடிக்கையில் படி 286 இந்தியர்கள் 5 வது விமானம் மூலம் டெல்லி வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் நாளுக்கு நாள் பலியாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
மேலும் இஸ்ரேல் மற்றும் காசா மக்களின் நிலை பெரும் கவலைக்கிடமாக காணப்படுகின்றது. இந்நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமது நாடு மக்களை மீட்கும் பணிகளை ஒவ்வொரு நாடும் துரிதப்படுத்தியுள்ள நிலையில், முதற்கட்டமாக இந்தியா ”ஒப்பரேஷன் அஜய்” திட்டத்தை அறிவித்தது.
18000 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கியுள்ள நிலையில், இதுவரையில் இத்திட்டத்தின் மூலம் 1180 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பி வந்தவர்களை இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றுள்ளார்.
அதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் “இந்தியர்கள் எங்கெல்லாம் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை. நாங்கள் ஒப்பரேஷன் கங்கா மற்றும் ஒப்பரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி, இப்போது ஒப்பரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம்.
இது ஐந்தாவது விமானம், நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான், மேலும் எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வருகிறோம்.” என தெரிவித்தார்.
Discussion about this post