சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதற்காக 40,000 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்பதோடு, அதற்கு அரசாங்கம் 61,600 மெட்ரிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ் தற்பொழுது காணப்படும் முறையை பயன்படுத்தி அடையாளங் காணப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதோடு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
நெல் கொள்வனவுக்கு 6,200 மில்லியன் ரூபா, நெல் உலர்த்துவதற்கு 290 மில்லியன் ரூபா, கதிரடிக்கு வாடகைக்கு 590 மில்லியன் ரூபா, பொதிச் செலவுக்கு 200 மில்லியன் ரூபா, நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 160 மில்லியன் ரூபா, அரிசி போக்குவரத்துச் செலவுக்கு 600 மில்லியன் ரூபா என்ற வகையில் 8,040. மில்லியன் ரூபா இதற்காக மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு மாறுபடும் எனவும், தேவை ஏற்பட்டால், சுமார் ரூ.10,000 மில்லியன் வரவு – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு இதற்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Discussion about this post