நாட்டில் அடுத்தவாரம் முதல் தடையின்றி மின்விநியோகம் இடம்பெறும். மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை, இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தமது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஜுன் மாதத்திலிருந்து தடையின்றி மின்சாரத்தை வழங்க முன்னதாக திட்டமிட்டிருந்தோம். எனினும், சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமாவதால், இரவு நேரத்திலும், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியிலும் மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதியில் இருந்து தடையின்றி, மின்சாரத்தை விநியோகிப்பதற்கு எவ்வளவு எரிபொருள் தேவைப்படுமென, இலங்கை மின்சார சபையிடம் தகவல் கோரப்பட்ட நிலையில், அந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்தவாரம் முதல் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜுன் முதலாம் திகதிதான் எமது இலக்காக இருந்தது, எனினும், 10 நாட்களுக்கு முன்னரே அதனை செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post