இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக
மீனவர்கள் 68 பேரை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன்
கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கை
கடற்பகுதியில் அத்துமீறி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால்
கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்களின் 8 படகுகளையும்
அவர்கள் கைபெற்றி. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13
மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால்
திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேசி உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இவ்
சம்பவம் குறித்து திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் தமிழக
எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னையை எழுப்பினர்.
மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை
திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீûஸ
செவ்வாய்க்கிழமை வழங்க்கினார்.
Discussion about this post