இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 வீதம் அதிரிகத்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அதுவேளை, இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படவில்லையாயின் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிததுள்ளார்.
Discussion about this post