முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இலங்கை விலங்குணவு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலங்குகளுக்கான உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், தமது தொழில்துறையில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு நிவாரணம் வழங்குமாறும் அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள சிறு குழந்தைகளில் சுமார் 30 சதவீதமானோர் புரதச் சத்து குறைப்பாட்டுடன் உள்ளனர்.
கிராமப் புறங்களில் இந்த நிலைமை இதைவிடவும் மோசமாக இருக்கும். இந்த நிலையில், பொதுமக்களுக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், புரதச் சத்து குறைப்பாடு ஏற்படும்.
எரிபொருள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினையால், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன சந்தைக்கு கிடைக்கும் அளவு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, நுகர்வோரின் கேள்விக்கு ஏற்ப அவற்றை விநியோகிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
Discussion about this post