இலங்கையில் சட்டம் ஒழுங்கை மேலும் பேணிக்காக்கும் வகையில் அனைத்து பொலிஸாரையும் ரோந்துப்பணியில் ஈடுபடுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக மக்கள் வன்முறைச் செயல்களிலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபடத் தூண்டப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் தேவையில்லாமல் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கும்பல் வன்முறை மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்க அவசியம் ஏற்பட்டால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளலாம் என்றும் பொலிஸாருக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
Discussion about this post