மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி 1.93 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது என்று தெரியவருகிறது.
அதுமாத்திரமன்றி தங்கத்தின் கையிருப்பானது 29 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் கையிருப்பதில் 2.3 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருந்ததுடன் தங்கத்தின் கையிருப்பானது 98 மில்லியன் டொலராக இருந்தது.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் இலங்கையிடம் 3.1 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்ததுடன் கடந்த நவம்பர் மாதம் 1.58 பில்லியன் டொலர் என்ற அளவில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து காணப்பட்டது.
எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த போது இலங்கையிடம் 7.5 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிப்பில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post