பாலியல் உணர்ச்சி தூண்டல் மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது என்று மாநகர உதவி இறப்பு விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்தார்.
இளைஞர்களும், யுவதிகளும் மருத்துவ ஆலோசனை இன்றி பாலியல் தூண்டல் மாத்திரைகளைப் பயன்படுத்துவதே மரணங்கள் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகின்றது.
20 முதல் 25 வயதான இளைஞர்கள் பாலுறவுப் பரிசோதனை முயற்சியாக பாலியல் தூண்டல் மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர்.
45 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் பாலுறவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்த மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.
பாலுறவு தூண்டல் மாத்திரைகளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வது மிக ஆபத்தானது என்று தெரிவித்த இரேஷா சமரவீர, உரிய அளவுக்கு மேலதிகமாக எடுக்கப்படும் மாத்திரைகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
Discussion about this post