” விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடத்தவுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை” என்று முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
” மே – 09 தாக்குதலானது அலரி மாளிகையில் ஆரம்பமானது. இதனை வேறு கட்சிகள் மீது சுமத்தி விட்டு பிரச்சினையை மூடி மறைக்கக் கூடாது. 9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் உள்ளது.
புத்தளம் கழுதை ஒன்று இரும்பு பொல்லுடன் செல்வதை நான் பார்த்தேன். அந்த கழுதையின் பின் முதுகில் ஏறி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சென்றார்.” – என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, காலி முகத்திடல் போராட்டம் தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post