இலங்கையில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அரிசியே கையிருப்பில் உள்ளது என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த வாரமளவில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவை எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
போதியளவு நெல் இல்லாததால் பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள உரிமையாளர்கள், தங்கள் தொழில்துறை பெரும் ஆபத்தில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், அரசாங்கம் வரிகளை சடுதியாக உயர்த்தியுள்ளது. அதுவும் அரிசி உற்பத்தியில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் கடும் அரிசி நெருக்கடி நாட்டில் ஏற்படும் என்றும், விலைகள் உச்ச அளவில் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post