இலங்கையில் இன்று (26) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உணவு பொதி உள்ளிட்ட அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எரிபொருள் விலை உயர்வையடுத்து, பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post