இந்தியாவிடம் இருந்து மேலம் 750 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்றும், இலங்கைக்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.
அதேவேளை, எரிபொருள் கொள்வனவுக்காக இந்திய அரசாங்கம் ஏற்கனவே 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
அதை 750 மில்லியன் டொலராக அதிகரிக்கக் கோரும் இலங்கை அரசாங்கம், மேலும் 500 மில்லியன் டொலர் புதிய கடன் எல்லையை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
Discussion about this post