சர்ச்சைக்குரிய சீனக் கப்பலான ஷி யான் 6 தற்போது இந்தியப் பெருங்கடலில் இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இன்று (27) செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், திங்கட்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டி, சீனக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், இலங்கையின் நிலையான செயற்பாட்டு நடைமுறைகளுக்கு அமைய கப்பல் செயற்பட்டால், பிரச்சினை ஏதும் ஏற்படாது எனவும் சப்ரி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷி யான் 6 என்ற சீனக் கப்பல், செப்டம்பர் 23 அன்று மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது, செப்டம்பர் 14 அன்று அதன் சொந்த துறைமுகமான குவாங்சோவை விட்டு வெளியேறிய பின்னர் செப்டம்பர் 14 அன்று சிங்கப்பூரில் காணப்பட்டது.
Discussion about this post