இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது.
இதனால் ஒரு கிலோ பால்மாவின் விலையை 300 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்று அந்தச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதனால் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post