சுற்றுலா இலங்கை (Sri Lanka) அணிக்கெதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய (India) அணி டக்வத் லூயிஸ் முறையில் விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது, கண்டி (Kandy) – பல்லேகல மைதானத்தில் இன்று (28) இடம்பெற்றது
அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது.
இலங்கை அணி
அந்தவகையில், துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா (Kusal Perera) அதிகபட்சமாக 53 ஓட்டங்களையும், பெதும் நிசங்க (Pathum Nissanka) 32 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) 03 விக்கெட்டுக்களை வீழ்த்த அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் அக்சர் பட்டேல் (Axar Patel) ஆகியோர் தளா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.
டக்வத் லூயிஸ்
பின்னர், வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டு அதன் பிறகு டக்வத் லூயிஸ் (DLS) முறைப்படி 08 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் பெற வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்ததன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
Discussion about this post