இலங்கையில் 30இற்கும் மேற்பட்டோருக்கு கண் நோய்த்தொற்றை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த இந்தியானா ஒப்தால்மிக்ஸ் தயாரித்த கண் சொட்டு மருந்துகளை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறித்த சொட்டு மருந்து நோய் தொற்றுக்களை கொண்டிருந்ததாக முறையிடப்பட்டமையை அடுத்து இந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கையின் சுகாதார அமைச்சினால் இந்த கண் சொட்டு மருந்து உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கண் சொட்டு மருந்தில் பர்கோல்டேரியா செபாசியா என்ற பக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம், இந்திய நிறுவனத்திடம் கேட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக இந்திய செய்தி ஒன்று கூறுகிறது.
Discussion about this post