தமிழர் நல்வாழ்வுக்காக இந்திய அரசாங்கம் எப்போதும் துணைநிற்கும் என
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.
இந்திய அரசாங்க நிதி உதவியினால் இலங்கையில் மலையகத்தில் கட்டி
அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை
முடித்து அதனை பயனாளிகளுக்கு வழங்க்குவதற்கான திறப்பு வழங்கும்
வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்
தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில்பங்கு கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர்
இவ்வாறு கூறினார்.
Discussion about this post