இந்திய – இலங்கை நில இணைப்பு இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான தற்போதைய அனைத்து வர்த்தக உடன்படிக்கைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை “மிகவும் விரும்பப்படும் நாடாக” இருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
“இந்திய சந்தைக்கான இலங்கை தயாரிப்புகள் ஜி.எஸ்.பி பிளஸ் போன்ற “வரி இல்லாத சலுகை” பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா வளர்ந்து வருகிறது. எமது புவியியல் இருப்பிடம், இந்தியாவுக்கு மிக அருகாமையில் இருப்பதால் நாம் அதனைப் பயன்படுத்த வேண்டும், அதிலிருந்து சிறந்ததைப் பெற வேண்டும்.
எமது உற்பத்தியாளர்கள், குறிப்பாக தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நடுத்தர வர்க்க நுகர்வோர் சந்தையை அடைய முடியும்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது இதுபோன்ற யோசனைகள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
Discussion about this post