இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
குறித்த விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்’ எனும் அமைப்பினூடாக குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு நேற்றையதினம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
Discussion about this post