குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியான அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், G20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினருக்கு குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் “இந்திய குடியரசு தலைவர்” என்பதற்கு பதிலாக “பாரத் குடியரசு தலைவர்” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி கண்டனம்
உலக பொருளாதாரத்தை பாதிக்க கூடிய காரியங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஜி20 நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த 19 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த மாதத்தின் இடைப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவும் தீர்மானம் கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த விடயம் தற்போது இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post