இந்தியாவின்-பீகார் (Bihar) மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பரரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது, கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டின்பேரில் குறித்த பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்தநிலையில், பாதிக்கப்பட்ட ஆண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணைஇதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் மருத்துவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது, ஆண் நண்பர் தம்முடன் ஐந்து ஆண்டுகளாக பழகிய நிலையில் திருமணத்துக்கு சம்மதிக்காத காரணத்தினாலேயே குறித்த பெண் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, பழிவாங்கும் விதமாக, ஆண் நண்பரை தனது வீட்டிற்கு வரவழைத்து, தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post