போர்ப்ஸ் பத்திரிகையின் தரவரிசைப்படி இந்தியாவின் பணக்கார நடிகர் மற்றும் ஒரு திரைப்படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஷாருக் கான் (shah rukh khan) ஆவார். அவரது சொத்து மதிப்பு 6300 கோடிகள் (இலங்கை பெறுமதியில் சுமார் 22000 கோடிகள்)ஆகும்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் குறித்து போர்ப்ஸ் பத்திரிக்கை நடத்திய இந்த தரவரிசையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிவூட்டில் ஆதிக்கம்
இந்த மதிப்பீடு ஐஎம்டிபி இணையதளத்தின் தரவை அடிப்படையாகக் கொண்டது.
மதிப்பீட்டின்படி, ஷாருக்கான் ஒரு படத்திற்கு150 – 250 கோடிகள் (இலங்கை ரூபாய் 875 கோடிகள்) வரை வசூலிக்கிறார். சமீபத்தில் வெளியான ஜவான் மற்றும் பதான் ஆகிய படங்கள் உலகளவில் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததன் மூலம் பொலிவூட்டில் அவரது ஆதிக்கம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகர்
சல்மான் கான் (salman khan)2900 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில் ரூ. 10100 கோடி) சொத்து மதிப்புடன் இந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகர் ஆவார். ஆனால் ஒரு படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் உலகம் முழுவதும் 466.63 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள நடிகர்
2500 கோடி ரூபாய் (இலங்கை ரூபாய் 8750 கோடி) சொத்து மதிப்பு கொண்ட அக்சய் குமார் (Akshay Kumar)பணக்கார நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆனால் ஒரு படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் 9வது இடத்தில் இருக்கிறார். ஒரு படத்திற்கு 60 முதல் 145 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார்.
சல்மான் கான் மற்றும் அக்சய் குமார் இந்தியாவின் பணக்கார நடிகர்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ரஜினி,விஜய்
ஆனால் ரஜினிகாந்த்(rajinikanth) மற்றும் ஜோசப் விஜய் (vijay) ஆகியோர் முறையே ஒரு திரைப்படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் வரிசையில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Discussion about this post